உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூர் மாவட்டத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 போலீசாருக்கு கொரோனா

Published On 2022-01-26 10:45 GMT   |   Update On 2022-01-26 10:45 GMT
கடலூர் மாவட்டத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கையில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 398 பேருக்கு கொரோனா தொற்று பரவல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், தூக்கணாம்பாக்கம் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம், சிறுபாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் என 4 போலீசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களை சார்ந்த பலருக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதா? என்பதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக போலீசாருக்கு தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து போலீசாரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:    

Similar News