ஆன்மிகம்
லட்சுமி விஷ்ணு

நாளை பாபாங்குசா ஏகாதசி: விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

Published On 2021-11-13 05:13 GMT   |   Update On 2021-11-13 08:03 GMT
ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிக்கு பாபாங்குசா ஏகாதசி என்று பெயர்.
ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்று பெயர். ஒருவருடைய பாவத்தை அகற்றும் அங்குசம் போன்றது என்பதால், இந்தப் பெயர் வந்தது. இந்த ஆண்டு பாபாங்குசா ஏகாதசி, 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.41 மணி முதல் மறுநாள் காலை 9.41 மணி வரை உள்ளது.

நாளை விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, கங்கை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் கைவரப்பெறும்.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நரக வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. ஐப்பசி ஏகாதசி நாளில், ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறை தெரியாமலோ, அல்லது மற்றவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்றோ, எப்படிச் செய்தாலும், இந்த விரதத்திற்கான பலன் கிடைக்கப்பெறும் என்பதே, பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மேன்மையாகும்.
Tags:    

Similar News