தொழில்நுட்பம்
பப்ஜி மொபைல்

பப்ஜி மொபைல் இந்திய வெளியீடு - மத்திய அமைச்சகத்தின் அப்டேட்

Published On 2021-01-09 07:00 GMT   |   Update On 2021-01-09 07:00 GMT
பப்ஜி மொபைல் இந்திய வெளியீடு பற்றிய கேள்விக்கு மத்திய அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது.


பப்ஜி மொபைல் மீண்டும் வெளியாகும் என அந்நிறுவனம் வெளியிட்ட டீசர், இந்திய பயனர்களிடையே கேமின் மறு வெளியீடு குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், இது எப்போது வெளியாகும் என்ற தகவல் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. 

இந்நிலையில், இந்த கேமின் இந்திய வெளியீடு பற்றி பப்ஜி மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.



இதுகுறித்து தனியார் நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு,` மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பப்ஜி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை' என பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு பப்ஜி மொபைல் உள்பட 117 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்ததோடு அவற்றை முடக்கவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பப்ஜி மொபைல் இந்திய வெளியீடு பற்றி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பப்ஜி நிறுவனம் மீண்டும் இந்தியாவில் இந்த கேம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. எனினும், தற்போதைய மத்திய அமைச்சகத்தின் பதில் மற்றும் முந்தைய பதில்களில் இதன் வெளியீடை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இடம்பெறவில்லை. 

Tags:    

Similar News