சமையல்
பூண்டு சட்னி

4 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாத சட்னி

Published On 2022-03-18 05:27 GMT   |   Update On 2022-03-18 05:27 GMT
இந்த சட்னியை பிரிட்ஜில் வைக்காமல் 4 நாட்கள் வரை கூட வெளியில் வைத்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி, வெள்ளை சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பரான காரசாரமான இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பூண்டு - 3
புளி - எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமல்லி - 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
வெல்லம் - சிறிய துண்டு
உப்பு - சுவைக்கு

செய்முறை


ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கெட்டிப் பதத்தில் புளியை கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு 3 முழு பூண்டுகளை தோலுரித்து சுத்தம் செய்து உரலில் போட்டு நசுக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, துருவி வைத்திருக்கும் பூண்டை எண்ணெயில் சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு பூண்டை வதக்க வேண்டும். பூண்டு கருகிப் போய் விடக் கூடாது. அதே சமயம் பச்சை வாடையும் வீசக் கூடாது.

வர மல்லியை இடுக்கியில் போட்டு இடித்து நன்றாக நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பூண்டினை பச்சை வாடை போக வதக்கிய பின்பு, ஒரு 1 ஸ்பூன் இடித்து வைத்திருக்கும் வர மல்லியை பூண்டுடன் சேர்க்க வேண்டும். அடுத்தபடியாக தனி மிளகாய்த் தூளை எண்ணெயில் சேர்த்து பூண்டுடன் நன்றாக வதக்கவேண்டும். மிளகாய் தூள் கருதிவிடக்கூடாது. மிளகாய்த்தூளை பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கினால் போதும்.

அடுத்தபடியாக 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, மிளகாய்தூளின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 3 லிருந்து 4 நிமிடங்கள் இந்த சட்னி நன்றாக கொதித்தவுடன் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்த்து உப்பு காரத்தை சரிபார்த்துக் கொள்ளவும். புளியின் பச்சை வாடை போகும் வரை மீண்டும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

எண்ணெய் ஓரத்தில் பிரிந்து மேலே மிதந்து வரும் பட்சத்தில், சட்னி பக்குவத்தில் வரும்போது, இறுதியாக பெருங்காயம், வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள் போதும். சூப்பரான பூண்டு சட்னி தயார். இந்த சட்னியை பிரிட்ஜில் வைக்காமல் 4 நாட்கள் வரை கூட வெளியில் வைத்து சாப்பிடலாம்.
Tags:    

Similar News