உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பின்னலாடை துறையை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூரில் 21-ந்தேதி பா.ஜனதா உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-01-12 06:53 GMT   |   Update On 2022-01-12 06:53 GMT
அபரிமிதமான நூல் விலை உயர்வால் தற்போது பின்னலாடை துறையினர் தத்தளிக்கின்றனர்.
திருப்பூர்:

பின்னலாடை துறையை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூரில்  21-ந்தேதி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடக்கிறது. 

இதுகுறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அபரிமிதமான நூல் விலை உயர்வால் தற்போது பின்னலாடை துறையினர் தத்தளிக்கின்றனர். பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 17, 18-ந்தேதிகளில் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இப்போராட்டத்துக்கு பா.ஜ.க., முழு ஆதரவு அளிக்கிறது. தமிழக அரசு நூல் விலையில் கிலோவுக்கு 50 ரூபாய் மானியம் வழங்கவேண்டும் என்பது உட்பட பல கோரிக்கையை வலியுறுத்தி 21-ந்தேதி புஷ்பா தியேட்டர் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News