செய்திகள்
ராமதாஸ்

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு கூட்டணி தர்மத்துக்காக வாக்களித்தோம்- ராமதாஸ் பேட்டி

Published On 2019-12-13 15:06 GMT   |   Update On 2019-12-13 15:06 GMT
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு கூட்டணி தர்மத்துக்காக வாக்களித்தோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தூத்துக்குடி செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு பா.ம.க. ஆதரவு தந்திருக்கிறது.

ஈழத் தமிழர்களை அங்கீகரிக்க வேண்டும், அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறோம்.

சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு விட்டது. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மம் என்ற காரணத்தினாலே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாங்கள் ஆதரித்து வாக்களித்து உள்ளோம். நாங்கள் வாக்களித்தது ஈழத் தமிழருக்கு எதிராக அல்ல.

மந்திரி பதவிக்காக நாங்கள் வாக்களிக்கவில்லை. அன்புமணி ராமதாசுக்கு மந்திரி பதவி தந்தாலும் நாங்கள் வேண்டாம் என்று தான் சொல்வோம். ஏற்கனவே மந்திரி பதவி வேண்டாம் என்று தான் சொல்லி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News