வழிபாடு
காரமடை அரங்கநாதர் கோவில்

காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு இந்த நேரத்தில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

Published On 2022-01-12 08:16 GMT   |   Update On 2022-01-12 08:16 GMT
காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி என்று கலந்தாய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிவில் நாளை நடை பெற உள்ள வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் காரமடை நகராட்சி ஆணையர் பால்ராஜ், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் உள்படபலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசியான வருகிற 13- ந் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். 14- ந்தேதி முதல் 18-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சொர்க்கவாசல் வழியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். சொர்க்க வாசலுக்குள் வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், வேதவியாச ஸ்ரீசுதர்சன பட்டர், மிராசுதாரர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கோவில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News