செய்திகள்
கோப்புப்படம்

திருச்சி விமான நிலைய கழிவறையில் வீசப்பட்ட ரூ.20¼ லட்சம் கடத்தல் தங்கம்

Published On 2021-01-11 00:21 GMT   |   Update On 2021-01-11 00:21 GMT
திருச்சி விமான நிலைய கழிவறையில் வீசப்பட்ட ரூ.20 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் மீட்டனர்.
செம்பட்டு:

இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து சிலர் விமானம் மூலம் திருச்சிக்கு தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.

இந்தநிலையில் நேற்று விமான நிலைய கழிவறையில் தங்க நகைகள் கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில், விமான நிலைய அதிகாரிகள் கழிவறைக்கு விரைந்து சென்று அங்கு வீசப்பட்டு கிடந்த தங்க நகைகளை மீட்டனர். மீட்கப்பட்ட நகைகள் 399 கிராம் எடை இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சத்து 28 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தங்க நகைகள் எந்த ஊரில் இருந்து கடத்தி வரப்பட்டது?, அதனை கடத்தி வந்த பயணி யார்? என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News