ஆன்மிகம்
கால பைரவர் கோவிலில் கும்பாபிஷேகம்

கால பைரவர் கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2020-08-03 08:29 GMT   |   Update On 2020-08-03 08:29 GMT
திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெரிய ஆலங்குளத்தில் கால பைரவர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு ஆடி பதினெட்டாம்பெருக்கு திருநாளான நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெரிய ஆலங்குளத்தில் கால பைரவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு ஆடி பதினெட்டாம்பெருக்கு திருநாளான நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

இதனையொட்டி யாகசாலை பூஜை நடந்தது. இதைதொடர்ந்து குடத்தில் இருந்து புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து கோவிலின் கருவறையில் கால பைரவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. மேலும் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான நிலையூர் முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிரேசன், கலை பிரிவு மாவட்ட துணை செயலாளர் கருப்புராஜா, விவசாய அணி ஒன்றிய செயலாளர் மச்சக்காளை அ.தி.மு.க கிளை செயலாளர் பழனி, ஊராட்சி செயலாளர் குரு, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் முக கவசம் அணிவிக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை 60 வீடு என்ற 120 வீட்டு பங்காளிகளின் அறங்காவலர் குழுவினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News