வழிபாடு
அகிலாண்ட நாயகி, யானை, சிலந்தி

திருவானைக்காவிற்கு அப்பெயர் எப்படி வந்தது தெரியுமா?

Published On 2022-02-23 05:01 GMT   |   Update On 2022-02-23 05:01 GMT
அன்னை பூலோகம் வந்து முனிவர்கள் எல்லாம் தவம் புரிந்து கொண்டிருந்த திருவானைக்கா சோலையை கண்டு அவ்விடத்திலேயே தானும் தவம் செய்ய முனைந்தாள்.
ஒருமுறை அன்னை பார்வதிக்கு பெரிய சந்தேகம் வந்து விட்டது. யோக தட்சிணாமூர்த்தியாக விளங்கும் இறைவன் போக மூர்த்தியாகவும் இருக்கும் காரணம் என்ன என்ற ஐயத்தை எழுப்பினாள். ஐயன் உடனே அதற்குப் பதில் சொல்லவில்லை.

பூலோகம் சென்று அங்குள்ள ஞானத்தலத்தில் தவமியற்றுமாறும் உரிய நேரத்தில் தாம் வந்து அன்னையின் ஐயத்தைத் தீர்ப்பதாகவும் கூறிவிட்டார். அதன்படியே அன்னை பூலோகம் வந்து முனிவர்கள் எல்லாம் தவம் புரிந்து கொண்டிருந்த திருவானைக்கா சோலையை கண்டு அவ்விடத்திலேயே தானும் தவம் செய்ய முனைந்தாள்.

தன் தவ வலிமையால் நீரை திரட்டி லிங்கமாக்கி பூசித்து வரலானாள். நீரின் வடிவமாக விளங்கியதால் இறைவனுக்கு அப்புலிங்கம் என்ற திருநாமமும் ஏற்பட்டது.

உரிய காலத்தில் இறைவன் தோன்றி உலகம் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் யோகம் போகம் இரண்டுமே அவசியம் என்பதை உலக ஆன்மாக்களுக்கு உணர்த்த முடிவு செய்தார். இதற்காகவே தான் யோகியாகவும் போகியாகவும் இருக்க வேண்டியுள்ளது என்னும் உண்மையை உணர்த்துகிறார்.

இந்த விளக்கத்தை அன்னை பெற்ற இடமான திருவானைக்காவிற்கு அப்பெயர் எப்படி வந்தது தெரியுமா? கயிலையைச் சேர்ந்த இரண்டு கணநாதர்கள் தாம் பெற்ற சாபத்தால் யானையாகவும் சிலந்தியாகவும் இல்லத்தில் வந்து பிறந்தனர். நாவல் மரமொன்றின் அடியில் அன்னை ஸ்தாபித்த அப்புலிங்கத்தை வழிபட்டு வந்தனர்.

ஆற்றுநீரை தும்பிக்கையில் எடுத்து வந்து யானை அபிஷேகம் செய்ய, சிலந்தியோ மரத்தில் இருந்து விழும் உலர்ந்த சரகுகள் இறைவன்மேல் படாவண்ணம் தன் வாயால் நூல் பந்தல் அமைத்தது. யானை போற்றிப் பரவிய இடம் என்பதால் இத்தலம் திருஆனைக்கா என்று அழைக்கப்பட்டது. சிலந்தி அடுத்த பிறவியில் கோச்செங்கட் சோழன் அரசனாகப் பிறந்து காவிரிக்கரையில் எண்ணற்ற சிவன் கோவில்களைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
Tags:    

Similar News