தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஆப்பிள் புதிய ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ உற்பத்தி துவங்கியதாக தகவல்

Published On 2020-05-25 11:58 GMT   |   Update On 2020-05-25 11:58 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன்களின் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன்களின் உற்பத்தியை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஹெட்போன் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தகவல்களின்படி புதிய ஆப்பிள் இயர்போன் உற்பத்தி துவங்கிவிட்டதாக கூறப்பட்டாலும், இதன் வெளியீடு பற்றி எந்த தகவலும் இல்லை. பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ மாடல் ஆடியோ பிரியர்களுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களின்படி புதிய ஹெட்போனில் உள்ள சென்சார் காதுகளில் வைக்கப்பட்டுள்ளதா இல்லை, கழுத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து இசையை இயக்கும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதிலுள்ள மற்றொரு சென்சார் இயர்கப்களில் பொருத்தப்பட்டிருக்கிறது. 



இது இயர்கப்கள் எந்த காதில் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் ஸ்டீரியோ சவுண்ட் வழங்கும். இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே இந்த ஹெட்போனில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன் மேக் அல்லது ஐஒஎஸ் சாதனத்துடன் இணைக்கும் போது ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போனிற்கான கஸ்டம் ஈக்வலைசர் செட்டிங்களை இயக்க முடியும். புதிய இயர்போன் லெதர் ஃபேப்ரிக் மற்றும் இதர பொருட்களால் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. 

புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26,355 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News