ஆன்மிகம்
ராகு கேது

ராகு, கேது தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோவில்கள்

Published On 2020-08-27 06:01 GMT   |   Update On 2020-08-27 06:01 GMT
ராகு கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி அதற்காக பயப்படத் தேவையில்லை. ராகு,கேது தோஷம் நீங்க வழிபடும் கோவில்களை பற்றி அறிந்தால், அங்கு சென்று பயன்பெறலாம்.
ராகு,கேது தோஷம் நீங்க வழிபடும் கோவில்களை பற்றி அறிந்தால், அங்கு சென்று பயன்பெறலாம். அதுபற்றி பார்க்கலாம்:-

சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் நீங்கிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை ராகுகேது பெயர்ச்சியின்போது வழிபடலாம்.

மேலும் காரைக்குடியில் செஞ்சை பகுதியில் நடராஜ் தியேட்டர் கீழ்புறம் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சந்நிதியும் உண்டு வரப்பிரசாதியான மூர்த்திகள் இங்கு சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம்.

பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு வழிபடலாம். திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அபிஷேகம் செய்யலாம்.

சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கும் வழிபடலாம்.

செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது ஸ்தலம் ஆகும். இங்கு வழிப்படலாம்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் பாதையில் உள்ள தொலைவில்லிமங்கலம் சென்று வணங்கலாம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா காஞ்சிக்கோவில் (வழி) தண்ணீர்பந்தல் பாளையம் போஸ்ட், தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி திருக்கோவில் ராகு கேதுவுக்குரிய பரிகார தலம் ஆகும்.

மயிலாடுதுறை பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர் அர்ச்சனைக்கும் பணம் கட்டினால் பிரசாதம் அனுப்பி வைப்பார்கள்.

கோவை-அவினாசி பாதையில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. இது ராகுகேது பரிகார ஸ்தலம், பிரார்த்தனை ஸ்தலம் என்று பெயர் பெற்றுள்ளது.

ராகு கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி அதற்காக பயப்படத் தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில்சென்று வழிபட்டால் போதும், ராகு கேதுப் பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள் என்பதும் ஐதீகம்.
Tags:    

Similar News