செய்திகள்
சிறப்பு ரெயில்

வட மாநிலங்களுக்கு மேலும் 10 சிறப்பு ரெயில்கள்- ரெயில்வே வாரியம் அனுமதி

Published On 2020-12-10 05:54 GMT   |   Update On 2020-12-10 05:54 GMT
எழும்பூர், ராமேஸ்வரம், நாகர்கோவிலில் இருந்து வட மாநிலங்களுக்கு மேலும் 10 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை:

கொரோனா பாதிப்பின் காரணமாக ரெயில் சேவை முழுமையாக தொடங்கப்படவில்லை. சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன. பல்வேறு வழித்தடங்களில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் மேலும் 10 ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1. சென்னை எழும்பூர்- ஜோத்பூர் வாராந்திர சூப்பர் பாஸ்ட் (எண்.06067/06068),

2. கொச்சுவேலி-இந்தூர்- கொச்சுவேலி வாராந்திர சூப்பர் பாஸ்ட் (எண்.026046/ 026045)

3. எர்ணாகுளம்- ஓகா- எர்ணாகுளம் வாரம் இருமுறை ஓடும் சிறப்பு ரெயில் (எண்.06338/06337)

4. ராமேஸ்வரம்-ஓகா- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.06733/ 06734)

5. நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.- நாகர்கோவில் வாரம் இருமுறை (எண்.06352/06351)

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது.
Tags:    

Similar News