செய்திகள்
முதல் மந்திரி விஜய் ரூபானி

குஜராத் மருத்துவமனை தீவிபத்து - பிரதமர் மோடி, முதல் மந்திரி நிவாரணம் அறிவிப்பு

Published On 2020-08-06 06:28 GMT   |   Update On 2020-08-06 06:28 GMT
குஜராத் மருத்துவமனை தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி ஆகியோர் நிதியுதவி அறிவித்துள்ளனர்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை அந்த மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதற்கிடையே, குஜராத் மருத்துவமனை தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சமும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News