ஆன்மிகம்
நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2020-09-14 04:50 GMT   |   Update On 2020-09-14 04:50 GMT
நன்செய் இடையாறு மகாமாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதியும் நடந்தது.
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் ஊரடங்கு காரணமாக நடைசாத்தப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்க அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து பக்தர்களின் தரிசனத்திற்காக நன்செய் இடையாறு கோவிலும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் நன்செய் இடையாறு மகாமாரியம்மன் கோவிலில் நேற்று விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதியும் நடந்தது. மேலும் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னர் மகா மாரியம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் நன்செய் இடையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகாமாரியம்மன் கோயிலில் தர்மகர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News