செய்திகள்
அருந்ததி ராய்

எனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை: அருந்ததி ராய்

Published On 2020-11-12 12:29 GMT   |   Update On 2020-11-12 12:29 GMT
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து எனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை என அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராயின் Walking with the Comrades என்ற புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து அருந்ததி ராய் புத்தகத்தில் எழுதியிருந்தார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பையடுத்து எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. அருந்ததி ராயின் புத்தகம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையில் எதிர்ப்பு எழுந்ததால் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு புத்தகம் நீக்கப்பட்டது என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்தார்.

இந்நிலையில் ‘‘புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை. பாடத்திட்டத்தில் எனது புத்தகம் கற்பிக்கப்பட்டதே இப்போதுதான் எனக்கு தெரியும். எனது பணி எழுதுவதுதான். புத்தகம் நீக்கப்பட்டதற்காக போராடுவது அல்ல’’ என அருந்ததி ராய் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News