ஆன்மிகம்
வராஹி அம்மன்

ராமநாதபுரம் வராஹி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா

Published On 2021-02-04 02:22 GMT   |   Update On 2021-02-04 02:22 GMT
ராமநாதபுரம் திரு உத்தரகோசமங்கை வராஹி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே திரு உத்திரகோச மங்கையில் மிகப் பழமையான மகா வராகி அம்மன் கோவில் உள்ளது. இதில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேக நடைபெற்ற நிலையில் நேற்று மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது.  யாகசாலை பூஜையுடன்  மகா வராகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக, தீப, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை கொடுமலூர் ஸ்ரீதர், ரமேஷ் குருக்கள், கோவில் ஸ்தானிகர் மங்கள பட்டர், சுப்பையா பட்டர் ஆகியோர் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பில் ராணி ராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின் பேரில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவில் ராணி லட்சுமி நாச்சியார், ஊராட்சி தலைவர் கருங்கம்மாள் முத்து, பொறியாளர்கள் மனோகரன், சேகர் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News