ஆன்மிகம்
கோவர்த்தனாம்பிகை அலங்காரம்

திருப்பரங்குன்றம் கோவிலில் உள் திருவிழாவாக நடந்த ஆடிப்பூர விழா

Published On 2021-08-11 08:32 GMT   |   Update On 2021-08-11 08:32 GMT
இந்த ஆண்டும் ஊரடங்கு அமலில் இருப்பதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடந்தது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் ஐப்பசி பூர விழாவும், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஐப்பசி பூர விழா மற்றும் ஆடிப்பூர விழா உள் திருவிழாவாக நடந்தது. இதனால் அம்மன் வீதி உலா நடைபெற வில்லை. கோவிலுக்குள் அம்மன் வலம் வந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆடிப்பூர விழா நேற்று கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடந்தது. இதையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகைக்கு சகல அபிஷேகமும், சர்வ அலங்காரமும் நடந்தது. மேலும் அம்பாளுக்கு தீப, தூப, ஆராதனை நடந்தது.

பூஜையைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கோவர்த்தனாம்பிகை எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News