செய்திகள்
கொல்கத்தாவில் வாகனங்கள் இயங்காததால் வெறிச்சோடி காணப்படும் சாலை

மேற்கு வங்கத்தில் இன்று முழு ஊரடங்கு- வெறிச்சோடிய சாலைகள்

Published On 2020-08-21 05:19 GMT   |   Update On 2020-08-21 05:19 GMT
மேற்கு வங்கத்தில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தடுக்க போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ், சமூகப் பரவலாகியுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலே தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. 

அதன்படி இந்த வாரம் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. பால் விற்பனை, மருந்தகம், மருத்துவமனைகள் தவிர பிற சேவைகள் அனைத்தும் செயல்படவில்லை. வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றுவோரை தடுப்பதற்காக போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் இதுவரை 1.29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாரம் இருமுறை முழு ஊரடங்கு நடைமுறையானது இந்த மாத இறுதிவரை அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News