தொழில்நுட்பம்
ரியல்மி எக்ஸ்50 ப்ரோ

32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2020-02-20 04:50 GMT   |   Update On 2020-02-20 04:50 GMT
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதை அந்நிறுவனம் புதிய டீசரில் தெரிவித்துள்ளது.



ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை அந்நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனின் முன்புறம் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு புதிய டீசரில் தெரிவித்துள்ளது.

இவற்றில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 105 டிகிரி அல்ட்ராவைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது. அல்ட்ராவைடு ஆங்கில் கேமராவின் ரெசல்யூஷனை ரியல்மி இதுவரை அறிவிக்கவில்லை. புதிய ரியல்மி எர்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் பிப்ரவரி 24-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஏற்கனவே வெளியிட்ட தகவல்களில் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படும் என ரியல்மி தெரிவித்தது. எனினும், இதில் சாம்சங் சென்சார் வழங்கப்படுமா அல்லது சோனி சென்சார் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.



இதுதவிர ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 20x சூம் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ராவைடு கேமரா மூலம் வீடியோக்களை போர்டிரெயிட் பிளர் செய்து எடுக்கும் அம்சம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதில் பிர்தயேக நைட் மோட் வழங்கப்படலாம் என்றும் இதில் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே அதிகபட்சம் 90 ஹெர்ச்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரஸ்ட் ரெட் மற்றும் மாஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ., 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News