செய்திகள்
தொழில்துறையினரிடம் கலந்துரையாடிய அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள் - இந்திய முதலீட்டாளர்களுக்கு டிரம்ப் அழைப்பு

Published On 2020-02-25 10:53 GMT   |   Update On 2020-02-25 14:11 GMT
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இந்திய தொழில்துறையினரை சந்தித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய தொழிலதிபர்களை இன்று மதியம் சந்தித்து,  கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

அமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள். அங்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதே நோக்கம். நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் பங்குச்சந்தை வளர்ச்சி அடையும்.

அமெரிக்காவில் இந்தியர்கள் தொழில் தொடங்குவதற்கான நடைமுறையை எளிமையாக்கி காலத்தை குறைத்துள்ளேன். தொழில் முனைவோரும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் அரசையே தொழில்துறை எதிர்பார்க்கக் கூடாது. வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் தொழிற்துறையினர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா ஆகியவை நல்ல திட்டங்கள்.



கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

இதில் தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், ஆனந்த் மகேந்திரா, அனில் அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News