தொழில்நுட்பம்
டிக்டாக்

இதை ஏற்றுக் கொள்ள முடியாது - அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை

Published On 2020-09-19 04:05 GMT   |   Update On 2020-09-19 04:05 GMT
அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.


அமெரிக்காவில் சீனாவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகள் அந்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தை முன்வைத்து இவற்றை தடை செய்ய டிரம்ப் உத்தரவிட்டார்.

எனினும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவேண்டும் அல்லது டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் பைட்-டேன்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக்டாக் செயலியை வாங்குவதற்கான போட்டியில் மும்முரமாக இருந்தன. இறுதியில், ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக் செயலியுடன் கைகோர்த்தது.



எனினும், இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் டிக் டாக், வி சாட் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய அமெரிக்காவில் தடை விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.  இரு செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி டிக்டாக் செயலியின் பெரும்பாலான பங்கு பைட்-டேன்ஸ் நிறுவனத்திடமே இருப்பதாக கூறப்படுகிறது. ஆரக்கிள் நிறுவனத்திடம் குறைந்தபட்ச பங்கு மட்டுமே உள்ளதாகவும் தெரிகிறது. 
Tags:    

Similar News