செய்திகள்
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த கங்கா பிரசாத் சர்மா

மேற்கு வங்காளத்தில் பாஜக முக்கிய தலைவர் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார்

Published On 2021-06-21 12:08 GMT   |   Update On 2021-06-21 12:08 GMT
பாஜகவில் பழைய தொண்டர்களுக்கு சரியான பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும், முடிவெடுக்கும் செயல்பாட்டில் பாகுபாடுகள் இருந்ததாகவும் கங்கா பிரசாத் சர்மா தெரிவித்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என தீவிரமாக களப்பணியாற்றிய பாஜகவின் கனவு தகர்ந்தது. தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு சென்றவர்கள் சிலர் மீண்டும் தாய் கட்சிக்கே திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், அலிபூர்தார் மாவட்ட பாஜக தலைவர் கங்கா பிரசாத் சர்மா இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கொல்கத்தாவில் கட்சியின் மூத்த தலைவர்களான சுகேந்து சேகர் ராய், முகுல் ராய் ஆகியார் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார். 

பின்னர் பேசிய கங்கா பிரசாத் சர்மா, ‘பாஜகவில் பழைய தொண்டர்களுக்கு சரியான பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. முடிவெடுக்கும் செயல்பாட்டில் பாகுபாடுகள் இருந்தன. 2-3 பேர் டிக்கெட் விநியோகித்தனர். கைலாஷ் விஜயவர்கியா அவர்களில் ஒருவர். கட்சியின் தோல்வி மற்றும் தற்போதைய நிலைக்கு அவர் பதிலளிக்க வேண்டும். அத்துடன் பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.
Tags:    

Similar News