ஆன்மிகம்
கணபதி

கணபதிக்கு அரசமரத்தடி ஏன்?

Published On 2019-08-27 07:00 GMT   |   Update On 2019-08-27 07:00 GMT
கணபதி பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரங்களிலும், குளக்கரை ஓரங்களிலும் உள்ள அரச மரத்தின் அடியில்தான் வீற்றிருப்பார். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கணபதி பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரங்களிலும், குளக்கரை ஓரங்களிலும் உள்ள அரச மரத்தின் அடியில்தான் வீற்றிருப்பார். அங்கு தான் விநாயகரின் விக்கிரகங்களை ஸ்தாபனம் செய்வார்கள். நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. குளித்து முடித்தவுடன் இறைவனை தரிசனம் செய்வது மிகவும் சிறந்தது என்பதால் குளக்கரை ஓரம் இருக்கும் அரச மரத்தின் அடியில் விநாயகரை வைத்துள்ளனர்.

பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது சுவாசிக்கும் காற்று, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்க கூடியது. எனவே கிராமங்களில் ஆற்றங்கரைகளிலோ, குளக்கரை ஓரங்களிலோ உள்ள அரசமரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.
Tags:    

Similar News