வழிபாடு
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்ட பக்தர்கள்

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்ட பக்தர்கள்

Published On 2022-04-09 03:42 GMT   |   Update On 2022-04-09 03:42 GMT
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலின் முன்பு கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன், தளவாய் மாடசாமி, தூசி மாடன், பேச்சியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

முக்கிய நிகழ்வாக கோவிலின் முன்பு கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Tags:    

Similar News