உள்ளூர் செய்திகள்
கோவிலில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம்

Published On 2022-04-15 09:37 GMT   |   Update On 2022-04-15 09:37 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த 7 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்பாள் வீதி உலா வருவது வழக்கம்.  திருவிழாவின் 9-ம் நாளான இன்று சுவாமி அம்பாள் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாவிடை சங்கரலிங்க சுவாமி ஒரு தேரிலும் சேவையிலும் கோமதி அம்மன் சிறிய தேரிலும் 5.30 மணிக்கு எழுந்தருளினர். அதனை தொடர்ந்து 6.45 விநாயகர் முருகன் தேரோட்டம் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து காலை மணிக்கு 9.35-க்கு தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்ட நிகழ்ச்சியை சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சரவணன், உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் சங்கரபாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துசெல்வி, மாவட்ட இளைஞரணி சரவணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News