செய்திகள்
தங்கம் (கோப்புப்படம்)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது

Published On 2019-11-15 05:47 GMT   |   Update On 2019-11-15 05:47 GMT
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.29,192-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது. அதன்பிறகு 2 நாட்கள் விலை உயர்ந்தது. நேற்று மாலை கிராம் ரூ.3,663, பவுன் ரூ.29304-க்கு விற்பனையானது.

இன்று கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3,649-க்கும் பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.29,192-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ரூ.48.40-ல் இருந்து இன்று 40 காசு குறைந்து ரூ.48-க்கும், ஒரு கிலோ ரூ.400 குறைந்து ரூ.48 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
Tags:    

Similar News