ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் நல்லவாடு, அரியாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் காட்சி அளித்த போது எடுத்த படம்.

நல்லவாடு, அரியாங்குப்பத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயானக் கொள்ளை தேரோட்டம்

Published On 2021-03-18 05:55 GMT   |   Update On 2021-03-18 05:55 GMT
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு மீனவ கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு மீனவ கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு ரணகளிப்பு வல்லான சூரசம்ஹாரம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளை தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி மயானத்திற்கு சென்று, அங்கு மயானக் கொள்ளை நடந்தது. கோவில் அறங்காவல் குழுவினர், நல்லவாடு கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

அதேபோல் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 54-வது அண்டு மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
Tags:    

Similar News