செய்திகள்

ஆதார் சட்டத்தின் சில பிரிவுகள் ரத்து - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தகவல்

Published On 2018-09-26 23:38 GMT   |   Update On 2018-09-26 23:38 GMT
5 ஆண்டுகள் வரை ஆதார் தகவல்களை சேகரித்து வைக்க வகை செய்யும் சட்டப் பிரிவு 27(1)ஐ நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. #AadharCard
புதுடெல்லி:

ஆதார் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் இச்சட்டத்தின் 18 பிரிவுகளை ரத்து செய்யவேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஆதார் சட்டத்தில் சில பிரிவுகளை ரத்து செய்தது.

மேலும் சிலவற்றில் திருத்தங்களை செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. குறிப்பாக 5 ஆண்டுகள் வரை ஆதார் தகவல்களை சேகரித்து வைக்க வகை செய்யும் சட்டப் பிரிவு 27(1)ஐ நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. அதேநேரம் நாட்டின் பாதுகாப்பு கருதி ஆதார் கைரேகை மற்றும் தகவல்களை தேவைப்படும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என்ற 33(2) பிரிவை நீதிபதிகள் மாற்றியமைக்கும்படி உத்தரவிட்டனர். இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேற்பட்ட அதிகாரிக்கு மட்டுமே இதற்கான அதிகாரத்தை வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதேபோல் தனிப்பட்ட நபர் பற்றிய தகவல்கள் தேவைப்பட்டால் அதற்குரிய வாய்ப்பை வழங்கவேண்டும் என்ற பிரிவிலும் 33(1) திருத்தம் செய்யும்படி தெரிவித்தனர்.இதுபோல் மேலும் 3 சட்டப்பிரிவுகளை ரத்து அல்லது மாற்றம் செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 
Tags:    

Similar News