ஆன்மிகம்
ஜெனகை மாரியம்மன்

ஜெனகை மாரியம்மன் கோவில் திருப்பணி

Published On 2020-09-08 07:44 GMT   |   Update On 2020-09-08 07:44 GMT
ஜெனகை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு கடந்த ஆண்டு பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு அண்டை மாநிலத்தில் இருந்தும் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் அம்மனை தரிசிக்க வருவார்கள். இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு கடந்த ஆண்டு பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் கோவிலுக்கு வருகை புரிந்தார்.

அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். கோவில் செயல் அலுவலர் சத்யநாராயணன், ஆலய பணியாளர்கள் பூபதி, வசந்த் ஆகியோர் கோவிலில் நடைபெற்ற திருப்பணி வேலைகளை எடுத்துக் கூறினர். அப்போது மாணிக்கம் எம்.எல்.ஏ. பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபத்தின் இருபுறமும் மண்டபங்கள் கட்ட வேண்டும்.

அர்த்தமண்டபத்தில் குளிர்சாதன வசதி ஏற்படுத்த வேண்டும். ராஜகோபுரம் முன்பாக பக்தர்கள் இளைப்பாற தகரசீட்டு அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், நகர செயலாளர் கொரியர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News