லைஃப்ஸ்டைல்
கூந்தலின் வகைகளும் அதை பராமரிக்கும் வழிமுறைகளும்

கூந்தலின் வகைகளும் அதை பராமரிக்கும் வழிமுறைகளும்

Published On 2019-11-06 03:07 GMT   |   Update On 2019-11-06 03:07 GMT
உங்கள் கூந்தல் எந்த வகையானது என்று தெரிந்து கொண்டால் அதை பராமரிப்பது சுலபம். இப்போது எந்த வகையான கூந்தலை எப்படி பராமரிப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
கூந்தலை நான்காக பிரிக்கலாம். உங்கள் கூந்தல் எந்தவகையைச் சார்ந்தது என்று கண்டுகொண்டீர்களானால், அதைப் பராமரிப்பது சுலபம்.
 
1. சாதாரண கூந்தல் (Normal hair)
2. வறண்ட கூந்தல் (dry hair)
3. எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல் (oil hair)
4. பலவீனமான கூந்தல் (weak hair)
 
சாதாரண கூந்தல் (normal hair)
 
நன்கு அடர்த்தியாகவும், சுத்தமாகவும், பளபளப்பாகவும், வளமையாகவும் இருக்கும் இத்தகைய கூந்தல் நன்கு வளரும் தன்மையுடையது.
 
வறண்ட கூந்தல் (dry hair)
 
இத்தகைய கூந்தல் நிறம் மங்கிய நிலையில் காணப்படும். முடியின் நுனிப்பகுதியில் வெடிப்பு காணப்படும். முடியின் நடுபகுதியில் உண்டாகும் முடிச்சுகளால் முடி அடிக்கடி உடைந்து உதிரும். மயிர்க்கால்கள் மற்றும் முடி  வறண்டு காணப்படுவதால், அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து பராமரித்து வரவேண்டும்.
 
எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல் (oil hair )
 
கூந்தலில் அளவுக்கதிமான எண்ணெய்ப்பசை காணப்படும். முடி மிகவும் மெலிந்து உறுதியற்று காணப்படும். எண்ணெய்ப் பசை அதிகமிருப்பதால் விரைவில் அழுக்கு மற்றும் தூசிகள் சேர்ந்து பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகி முடி கொட்டல் ஏற்படும்.
 
கூந்தல் மசாஜ்
 
1. மயிர்க்கால்களில் (scalp) விரல் நுனிகளைக் கொண்டு நன்கு அழுத்தி தலைமுழுவதையும் தேய்க்க வேண்டும் .
2. கூந்தலை வரிவரியாகப் பிரித்து, பஞ்சில் எண்ணெய்யை நனைத்து, மயிர்க்கால்கள் முழுவது நன்கு தேய்க்க வேண்டும்.
3. மசாஜ் செய்யும்பொழுது தலையின் முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாய் செய்வது சிறந்த பலனைத் தரும்.
4. கப்பிங் முறையில் விரல்களை ஒன்றாக இணைத்து, குவித்து தலை முழுவதும் தட்டிவிட வேண்டும் .
5. இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைத்து, சுண்டுவிரலால் டேப்பிங் முறையில் மெதுவாக தலையில் தட்டி விடவேண்டும் .
6. விரல்நுனிகளை மயிர்க்கால்களில் வைத்து லேசாகக் கிள்ளுவதுபோல் பின்சிஸ் முறையில் தலைமுழுவதும் மசாஜ் செய்தல் வேண்டும்.
 
கூந்தலைப் பராமரிக்க ஆவிப்பிடித்தல்(steaming)
 
மசாஜ் குறைந்தபட்சம் 20  நிமிடங்கள் செய்யப்பட வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில்  ஒரு பெரிய துண்டினை நனைத்து, பொறுக்கும் அளவு சூட்டுடன் தலையில் சுற்றிட வேண்டும். இதேபோல் நான்கு முறை செய்ய வேண்டும்.
Tags:    

Similar News