செய்திகள்
பான் அட்டை

பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2020-03-03 04:27 GMT   |   Update On 2020-03-03 04:27 GMT
ஆதார் கார்டு எண்ணை பான்கார்டுடன் குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இறுதி வாய்ப்பாக இந்த மாதம் 31-ந்தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பான்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவரும் இந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை அதில் இணைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய பான்கார்டு செயல்படாமல் முடங்கி விடும்.

ஆதார் கார்டு எண்ணை பான்கார்டுடன் குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும்.



ஏப்ரல் 1-ந்தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். பான்கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.

ஆனால், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணபரிமாற்றத்துக்கு பான்கார்டை பயன்படுத்தும் போது அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த மாதம் 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். என்றாலும் ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்பட தொடங்கி விடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News