உள்ளூர் செய்திகள்
இல்லம் தேடி கல்வி மையத்தில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர் .கலைஞர் ஆய்வு செய்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க

இல்லம் தேடி கல்வி மையம் ஆய்வு

Published On 2022-05-06 10:11 GMT   |   Update On 2022-05-06 10:11 GMT
அம்மாபேட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தை ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆலோசனையின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வழிகாட்டுதலில் உதவி திட்ட அலுவலர் ரமேஷ் , உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்  ஜெ. ராஜா ஆகியோர் செயலுக்கு இணங்க மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை அறிவுறுத்தலின் பேரில்  இல்லம் தேடிக்  மையத்துக்கு வராத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.     

அதன்படி கல்வி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் ஆர் .கலைஞர் ஒரத்தநாடு கல்வி மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில்  செயல்பட்டு வரும்  அருந்தவபுரம், நடுப்பட்டி, நடுத்தோப்பு, சமத்துவபுரம்  குடியுருப்புகளில் செயல்படும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தன்னார்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா கால பாதுகாப்பு முறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இல்லம் தேடிக் கல்வி மையங்களுடன் மாணவர்களை இணைத்தல், மாணவர்கள் உற்சாகமாக வரைதல், வண்ணம் தீட்டுதல், பாடல்கள் பாடுதல் மற்றும் எளிய கணித விளையாட்டுகள் போன்ற செயல்பாடுகளை   செய்து வருகின்றனர். தன்னார்வலர் வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றுதல், மாணவர்கள் வருகையை பதிவு செய்வது குறித்து விளக்கம் அளித்தனர். 

கல்வி நிலைப்பாட்டை நடத்துவது குறித்தும் அவர்களிடம் விளக்கி  கூறப்பட்டது.   இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்  வட்டார வள மேற்பா ர்வையாளர்  செல்லையா, வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர்கள் ராதா , ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், குருமூர்த்தி  மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள்  ஹரிப்பிரியா, மதுமதி, சுசிலா, ஹேமலதா, தனலட்சுமி, பானுமதி, விஷாலி கமலி, மஞ்சு பார்கவி ,கனிமொழி வேம்பு, ஞானம்பிகை, சினேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News