செய்திகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

இந்தியா கொரோனா தொற்றை எதிர்கொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி ரூபாய் நன்கொடை

Published On 2021-04-29 10:27 GMT   |   Update On 2021-04-29 10:27 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடும் நிலையில், ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் வீரர்கள் தங்களால் முயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமான பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. இதனால் வெளிநாடுகள் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை அனுப்பி வருகின்றன.

தற்போது ஐபிஎல் போட்டிகள் மிகுந்த பாதுகாப்பு வளையத்திற்குள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் அமெரிக்க டாலரை ஆக்சிஜன் வாங்கி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நன்கொடையாக வழங்கினார்.

பிரெட் லீயும் நன்கொடை வழங்கியுள்ளார். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இந்தியாவிற்கு 7.5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

‘‘ராஜஸ்தான் ராயல்ஸ் திரட்டிய நிதி, இந்தியாவுக்கு உதவ உதவும், ராஜஸ்தான் மாநிலத்தை மையமாகக் கொண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் பவுண்டேசன் தொடர்ந்து பல முயற்சிகளைக் கொண்டுள்ளது’’ என ராஜஸ்தான் ராயல்ஸ் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News