செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் துணை கேள்வியை சபாநாயகர் அனுமதிக்காததால் காங்கிரஸ் வெளிநடப்பு

Published On 2020-03-16 08:11 GMT   |   Update On 2020-03-16 08:11 GMT
வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தவர்கள் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி எழுப்பிய துணை கேள்விக்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் வங்கிகளில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கான பதிலை நிதித்துறை இணை மந்திரி தாக்குர் அளித்த பின்னர் துணை கேள்வி ஒன்றையும் ராகுல் காந்தி எழுப்பினார்.

ஆனால், கேள்வி நேரம் காலை 11 மணிக்கு தொடங்கி நன்பகலுடன் நிறைவடைந்ததாக குறிப்பிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்தியின் துணை கேள்வியை அனுமதிக்க மறுத்து விட்டார்.



சபாநாயகரின் இந்த முடிவுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, எனது கேள்வியை சபாநாயகர் அனுமதிக்காதது ஒரு பாராளுமன்ற உறுப்பினரான என்னுடைய உரிமையை பறிக்கும் செயலாகும். சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் நான் வேதனை அடைந்துள்ளேன்.

வங்கிகளில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்களின் பெயர்களை வெளியிட இந்த அரசு ஏன் அஞ்சுகிறது? என்பது புரியவில்லை என்று குறிப்பிட்டார்.

Tags:    

Similar News