செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

Published On 2021-01-20 06:13 GMT   |   Update On 2021-01-20 06:13 GMT
விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை:

நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கடந்த 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவி ஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக தமிழகத்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ், கோவேக்சின் மருந்து 20 ஆயிரம் டோஸ் மருந்துகள் வந்திருந்தது.

இதில் 2 தடுப்பூசிகளும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல் நாளில் 166 மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் பிறகு மையங்கள் அதிகரிக்கப்பட்டு 172 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதில் இதுவரை 25 ஆயிரத்து 280 பேர் ‘கோவி ஷீல்டு தடுப்பு மருந்தும், 628 பேர் கோவேக்சின் தடுப்பு மருந்தும் போட்டுக் கொண்டுள்ளனர்.

5 லட்சத்து 36 ஆயிரம் அளவுக்கு மருந்துகள் வந்திருந்த போதிலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

முன்பதிவு செய்தவர்களில் மிகக்குறைந்த அளவிலே வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதே போல் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போட யாருக்கும் மறுப்பும் தெரிவிப்பதில்லை.

தாமாக முன்வந்து தடுப்பூசி போடுபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துகிறோம். சிலருக்கு பயம் வருவது இயல்புதான். இதில் விழிப்புணர்வு மிக முக்கியமாகும்.

பொதுமக்கள் எல்லோருக்கும் நாங்கள் தடுப்பூசி போடவில்லை. சுகாதார முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிகமான பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

பொதுமக்களும் தடுப்பூசி போடலாம் அறிவித்தால் ஒரே நாளில் மருந்து காலியாகி விடும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.

இவ்வாறுஅவர் கூறினார்.
Tags:    

Similar News