செய்திகள்
கோப்பு படம்

தலைமை நீதிபதி அமர்வில் மேலும் 4 முக்கிய வழக்குகளில் இந்த வாரம் தீர்ப்பு

Published On 2019-11-09 22:45 GMT   |   Update On 2019-11-09 22:45 GMT
அயோத்தி வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து தலைமை நீதிபதி அமர்வில் மேலும் 4 முக்கிய வழக்குகளில் இந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந்தேதி பணி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் தனது தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தீர்ப்பை அவர் வெளியிடுகிறார். அந்தவகையில் வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேலும் 4 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு முக்கியமானதாகும்.

மேலும் ‘காவலாளியே திருடன்’ என்ற கோஷத்துக்காக ராகுல்காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பும், சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களின் தீர்ப்பும் இந்த வாரம் வழங்கப்படும் என தெரிகிறது.

இதைப்போல, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரும் என்ற டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News