ஆன்மிகம்
திருநள்ளாறு

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடத்த அனுமதி வழங்க கோரிக்கை

Published On 2021-04-17 06:49 GMT   |   Update On 2021-04-17 06:49 GMT
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கவர்னருக்கு மாவட்ட இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட இந்து முன்னணி தலைவர் விஜயன் புதுச்சேரி கவர்னருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றின் 2-ம் அலையிலும், தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புகழ்மிக்க கோவில்களில் திருவிழாக்கள் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் இணையதளம் வாயிலாக பக்தர்கள் பார்க்கவும் அந்தந்த கோவில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

ஆனால், உலக புகழ்மிக்க காரைக்கால் திருநள்ளாறில் உள்ள, சனீஸ்வரர் கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா நிறுத்தப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இது பக்தர்களுக்கு மிகுந்த மன வேதனை தரக்கூடியதாக உள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக இந்த திருவிழா நிறுத்தப்பட்டது.

மேலும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறுவதை போல், திருநள்ளாறிலும் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழாவையும் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்த வேண்டும். அதேபோல் அனைத்து நிகழ்ச்சிகளையும் இணையதளம் வாயிலாக பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News