ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவராத்திரி உற்சவம்17-ந்தேதி தொடக்கம்

Published On 2020-10-10 06:26 GMT   |   Update On 2020-10-10 06:26 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 17-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை நவராத்திரி உற்சவம் நடக்கிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க குறைந்த எண்ணிக்கையில் வி.ஐ.பி. பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருப்பதி :

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 17-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை நவராத்திரி உற்சவம் நடக்கிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க குறைந்த எண்ணிக்கையில் வி.ஐ.பி. பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில் சாதாரண பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

கோவில் அருகில் உள்ள கிருஷ்ணசாமி முக மண்டபத்தில் நடக்கும் நவராத்திரி உற்சவத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு தினமும் மஞ்சள், குங்குமம், பால், தயிர், இளநீர், தேன் மற்றும் சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் நடக்கிறது.
Tags:    

Similar News