செய்திகள்
கோழிப் பண்ணை

சத்தீஸ்கரில் பறவை காய்ச்சலை தடுக்க 15 ஆயிரம் கோழிகள் அழிப்பு

Published On 2020-01-10 08:01 GMT   |   Update On 2020-01-10 10:04 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் பறவை காய்ச்சலை தடுக்க இதுவரை 15,426 கோழிகளும், 30,000 முட்டைகளும் அழிக்கப்பட்டன. இந்த வைரசால் அப்பகுதி மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டம் கிபகுந்த் பூரில் உள்ள அரசு கோழிப் பண்ணையில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எச்5என்1 வைரஸ் பாதிப்புக்குள்ளான கோழிகளும், கால்நடைகளும் கடந்த டிசம்பர் 7-ந் தேதி உயிரிழந்தன. அவை சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கின நோய் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பின்னர் பறவையினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து கோழிகளும், காடைகளும் உயிரிழந்து வந்தன.

இதைத் தொடர்ந்து பறவை காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். கொரியா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் கோழிகள், காடைகள் அழிக்கப்பட்டன.

இதுவரை 15,426 கோழிகளும், 30,000 முட்டைகளும் அழிக்கப்பட்டன. இந்த வைரசால் அப்பகுதி மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அழிக்கப்பட்டதற்கு ஈடாக இழப்பீடும் வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News