ஆன்மிகம்
சீனிவாசமங்காபுரம் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

சீனிவாசமங்காபுரம் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

Published On 2020-11-13 07:10 GMT   |   Update On 2020-11-13 07:10 GMT
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கும், கொடிமரம் பலிபீடம் ஆகியவை உள்பட பல்வேறு சன்னதிகளுக்கும் பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கும், கொடிமரம் பலிபீடம் ஆகியவை உள்பட பல்வேறு சன்னதிகளுக்கும் பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, துணை அதிகாரி சாந்தி, உதவி அதிகாரி தனஞ்செயலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News