உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி

Published On 2022-05-07 10:22 GMT   |   Update On 2022-05-07 10:22 GMT
வனத்துறையினர் வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளித்தது. பக்தர்கள் மலை ஏற ெதாடங்கி உள்ளனர்.
வடவள்ளி:

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள்  மலையேற அனுமதி அளிக்கப்பட்டது. 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் தினமும் மலையேறி வந்தனர். இந்த நிலையில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகளின் நடமாட்டம் மலைப்பாதையில் அதிகமாக இருக்கும். 

எனவே மே மாதம் முதல் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு அனுமதிக்கப்  படமாட்டார்கள் என வனத்துறை அறிவித்தது. இதனை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளித்தது. பக்தர்கள் மலை ஏற ெதாடங்கி உள்ளனர்.
Tags:    

Similar News