செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி - 49 பேருக்கு தொற்று

Published On 2021-06-25 00:49 GMT   |   Update On 2021-06-25 00:49 GMT
வேலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழந்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதனால் தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 63 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் 49 பேருக்கு தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த 15 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள். இந்த நிலையில் நேற்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் பலியானார்கள்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 46 ஆயிரத்து 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 194 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,007 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 300-க்கும் குறைவான நபர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 96 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 164 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி 4 பேர் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News