ஆன்மிகம்
சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சாமிகள்

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் திருவிழா நிறைவு

Published On 2021-04-21 04:16 GMT   |   Update On 2021-04-21 04:16 GMT
மதுரைகாளியம்மன், விநாயகர், மதுரை வீரன், கருப்பண்ணசாமி, காத்தவராய சுவாமி, சின்னான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது..
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. . திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று தொட்டியம் லாரி டிரைவர்கள் சங்கம் மற்றும் சந்தனகாப்பு விழா குழுவினர் சார்பாக அனைத்து சாமிகளுக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

முன்னதாக காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு மதுரைகாளியம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் மதுரைகாளியம்மன், விநாயகர், மதுரை வீரன், கருப்பண்ணசாமி, காத்தவராய சுவாமி, சின்னான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது..

பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை லாரி டிரைவர்கள் சங்க தலைவர் சேகர் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News