செய்திகள்
சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன்

நாட்டின் எந்த பகுதியிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை - ஹர்ஷ்வர்தன்

Published On 2021-04-06 20:35 GMT   |   Update On 2021-04-06 20:35 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடர்ந்து வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் நேற்று ஒரேநாளில்  நாடு முழுவதும் 96 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் இதுவரை 8 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 926 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 11 மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் பேசுகையில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 92.38 சதவீதம் ஆக உள்ளது. வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையிலும் இறப்பு விகிதம் 1.30 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மிகப்பெரிய அளவிலான திருமண நிகழ்ச்சிகள், தேர்தல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட காரணங்கள் திடீரென வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன.

நாட்டின் எந்த பகுதியிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News