ஆன்மிகம்
திருவெள்ளறை பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ நிறைவு விழா

திருவெள்ளறை பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ நிறைவு விழா

Published On 2020-10-03 02:47 GMT   |   Update On 2020-10-03 02:47 GMT
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் மிகவும் பழமையான புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவத்தின் நிறைவு விழா நேற்று இரவு நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் மிகவும் பழமையான புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவ விழா கடந்த 27-ந்தேதி தொடங்கி நடைபெற்றது.

அன்று பெருமாள், பங்கஜவல்லி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தராயர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தாயார் பல்லக்கிலும், பெருமாள் புறப்பாடும் நடைபெற்றது.

பவித்ர உற்சவத்தின் நிறைவு விழா நேற்று இரவு நடைபெற்றது. புண்டரீகாட்ச பெருமாள், பங்கஜவல்லி தாயாருக்கு தீர்த்த வாரியும், அதைத்தொடர்ந்து திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் கோவிலில் கொடிமரத்தை வலம் வந்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.
Tags:    

Similar News