ஆன்மிகம்
காவல் தெய்வமான பிலாவடி கருப்பு

காவல் தெய்வமான பிலாவடி கருப்பு

Published On 2019-10-24 03:55 GMT   |   Update On 2019-10-24 03:55 GMT
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு காவல் தெய்வம் பிலாவடி கருப்பு. இவரை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு காவல் தெய்வம் பிலாவடி கருப்பு, இவர் காவல் காத்து வந்த பசுக்களின் பாலை சிவன் தினமும் குடித்து வந்தாராம். இதனை ஒருநாள் கவனித்த பிலாவடி கருப்பு. பிரம்பல் சிவனை தாக்கிவிட்டார். அதன் பிறகு அவருக்கு சிவன் தரிசனம் தந்துள்ளார். அது முதல் பிலாவடி கருப்பு, அங்கு காவல் தெய்வாமானார். பிலாவடி கருப்பு கோவில் அருகே தைல கிணறும் உள்ளது. இதன் அருகே உள்ள பலா மரத்தில் ஒரு காய் விழுந்தால் தான் அடுத்த காய் காய்க்கும்.

தவசிப்பாறை

மகாலிங்கம் கோவிலில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கம் இறங்கினால் வருவது தவசிப்பாறை.

கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் இது அமைந்துள்ளது. கோவிலில் இருந்து இங்கு செல்ல குறைந்தது 2 மணி நேரம் ஆகும். வழியில் மக்கள் தீர்த்தம் உள்ளது. பார்வதி தேவி, இங்கு தவம் செய்ய வந்தபோது அவருடன் வந்த புஷ்பகை, கொந்தகை, அமிர்தகை, கருணிகை, மிருதுபாஷிகை, சுச்லிகை,, சுமுகை என்ற பணிப்பெண்கள் இந்த தீர்த்தத்தில் மஞ்சள் தேய்த்து குளித்ததால், மஞ்சள் தீர்த்தம் என பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. இந்த குகையில் ஒரு ஆள் மிகவும் சிரமப்பட்டு செல்லும் வகையில் துவாரம்(வாசல்) உள்ளது. இதன் வழியாக சென்றால், உள்ளே 10 பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதி உள்ளதாகவும் அங்கு ஒரு லிங்கம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 18 சித்தர்கள் தினமும் சிவபூஜை செய்யும் இங்கு. மனதிடம் உள்ளவர்கள் மட்டுமே செல்லமுடியும் என பலரும் கூறுகின்றனர். குகைக்கு மேலே உள்ள 9 பெரிய பாறாங்கற்கள், நவக்கிரகக் கல் என அழைக்கப்படுகிறது
Tags:    

Similar News