ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்குகிறது

Published On 2021-10-07 03:51 GMT   |   Update On 2021-10-07 03:51 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) நவராத்திரி விழா தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.இந்த விழா காரணமாக அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) நவராத்திரி விழா தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழா தனிமையில் நடத்தப்படுகிறது.

விழாவையொட்டி தினமும் மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை கோவிலின் கிருஷ்ணசாமி முகமண்டபத்தில் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் மற்றும் பிற சுகந்த திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இதேபோல், இரவு 7 மணி முதல் 8 மணி வரை கோவில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. 15-ந் தேதி உற்சவரை கஜ வாகனத்தில் வைத்து ஆஸ்தானம் செய்யப்படுகிறது. இந்த விழா காரணமாக அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News