தொழில்நுட்பம்
கோப்பு படம்

ஐபோன் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

Published On 2018-07-12 07:23 GMT   |   Update On 2018-07-12 07:23 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் 2018 ஐபோன்கள் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மிங் சி கியோ தெரிவித்திருக்கிறார். #applenews



ஆப்பிள் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்து பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். 

அதன்படி ஆப்பிள் நிறுவனம் 11-இன்ச் ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினி, பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச், ஏர்பவர் உள்ளிட்ட சாதனங்களை உருவாக்கி வருவதாக மிங் சி கியோ தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட சாதனங்களுடன் 5.8 இன்ச் OLED, புதிய 6.5 இன்ச் OLED, 6.1 இன்ச் எல்சிடி மாடல்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ மாடல் ஐபோன் X போன்றே ஃபேஸ் ஐடி, ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேக் மினி அப்டேட் குறித்து அதிக தகவல்களை வழங்காத பட்சத்திலும், புதிய பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோப்பு படம்

மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களிலும் புதிய பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த நோட்புக் மாடலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாடல் மேக்புக் ஏர் இன்றி 12 இன்ச் மேக்புக் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேக்புக் ஏர் சாதனத்துக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் மேக்புக் மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் சாதனத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் இரண்டு 2018 மாடல்களை உருவாக்கி வருவதாகவும், இவற்றில் ஒரு மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் மேம்படுத்தப்பட்ட இதய துடிப்பு அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இரண்டில் ஒரு மாடல் 1.57 இன்ச் (39.9 மில்லிமீட்டர்) மற்றொரு மாடலில் 1.778 இன்ச் (45.2 மில்லிமீட்டர்) டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் எதிர்பார்க்கப்படும் ஏர்பாட் மற்றும் ஏர்பவர் சாதனங்கள் 2018 மூன்றாவது காலாண்டு வாக்கில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய சாதனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், இவை செப்டம்பர் மாத ஹார்டுவேர் நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News