செய்திகள்
மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகளை காணலாம்

‘நிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2020-11-25 05:22 GMT   |   Update On 2020-11-25 05:22 GMT
‘நிவர்’ புயல் எதிரொலியாக குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி:

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக கடற்கரை பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் வள்ளம், கட்டுமரம் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவதுறை, கோவளம், புதுகிராமம், சிலுவை நகர், மணக்குடி, கீழமணக்குடி உள்பட ஏராளமான கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக மேடான பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் அனைத்து கடற்கரை பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் சந்தைகளில் மீன்வரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் மீன் விலை ‘கிடு.. கிடு...’ வென உயர்ந்து உள்ளது.
Tags:    

Similar News